Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படம்- வெளியான புதிய அப்டேட்!

02:58 PM Aug 02, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் நடிகர்களுள் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் ஜேசன் சஞ்சய்யின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக அவர் வெளிநாடு சென்றார்.

விஜய் அரசியல் பயணத்தை அறிவித்ததிலிருந்து சஞ்சய் எப்பொழுது வருவார் என எதிர்பார்ப்புகள் அதிகமாகி உள்ளன. ஆனால் முன்னதாகவே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும், அவர் இயக்குநராகதான் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து அவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.  இந்நிலையில் யார் அவர் படத்தின் நடிகர், என்ன கதைக்கரு என எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

இந்நிலையில், சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படம் குறித்து ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் நாயகனாக துருவ் விக்ரமும் நாயகியாக அதிதி ஷங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.

கிரிக்கெட்டை மையமாக கொண்ட கதையை சஞ்சய் இயக்க உள்ளதாக முன்னதாகவே தகவல் வெளியான நிலையில், இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
actor vijayJason SanjayLyca ProductionNews7Tamilnews7TamilUpdatesthalapathy vijayvijay
Advertisement
Next Article