For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வள்ளுவனின் வரிகளை மேற்கோள் காட்டி முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்! குறள்கள் வாயிலாக கூறும் செய்தி என்ன?

04:14 PM Feb 02, 2024 IST | Web Editor
வள்ளுவனின் வரிகளை மேற்கோள் காட்டி முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்  குறள்கள் வாயிலாக கூறும் செய்தி என்ன
Advertisement

வள்ளுவனின் வரிகளை மேற்கோள் காட்டி தனது முதல் அரசியல் அறிக்கையை வெளியிட்டார் நடிகர் விஜய். அது என்னென்ன குறள்கள் என்பது குறித்து பார்க்கலாம்...

Advertisement

‘தமிழக வெற்றி கழகம்’ என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய்,  தனது முதல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் நடிகர் விஜய் 2 திருக்குறள்களை மேற்கோள் காட்டில் தனது கருத்தை முன்வைத்துள்ளார். இதன்படி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது அறிக்கையில் மேற்கோள் காட்டிய வள்ளுவன் வரி ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ இது திருக்குறளில் 972-ஆம் குறள் ஆகும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

இதன் பொருள் பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும் என்பதாகும்.

இதே போன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது அறிக்கையில் இரண்டாவதாக பயன்படுத்திய திருக்குறள் வரி ‘எண்ணித் துணிக கருமம்’. இது திருக்குறளில் 467-ஆம் குறள் ஆகும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

இதன் பொருள், நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு என்பதாகும்.

Tags :
Advertisement