Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அல்லு அர்ஜூனை நேரில் சந்தித்த நடிகர் #VijayDeverakonda - கட்டி தழுவி ஆறுதல்!

02:40 PM Dec 14, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் அல்லு அர்ஜுன் சிறையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய பின் நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் சந்தித்து கட்டி தழுவி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Advertisement

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிச.5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிச.4 அன்று இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. இதனை பார்ப்பதற்கு நடிகர் அல்லு அர்ஜூன் சந்தியா திரையரங்கிற்கு சென்ற போது அல்லு அர்ஜூனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் தியேட்டரில் கூடினர்.

இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் பிரீமியர் காட்சி பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண்ணும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் (வயது 9) நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது ரசிகர்கள் பலரும் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால் இருவரும் மூச்சுபேச்சின்றி சுயநினைவை இழந்தனர்.

இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐதராபாத் போலீசார் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் இந்த வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் உள்ளூர் நீதிமன்றம் (Local Court) 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் உடனடியான ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் பிணையுடன் அல்லு அர்ஜூனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை சிறையில் இருந்து ரிலீஸ் ஆன அல்லு அர்ஜூன் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது அல்லு அர்ஜுனின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இந்த நிலையில் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்றார். அப்போது விஜய் தேவரகொண்டா அல்லு அர்ஜூனிடம் நலம் விசாரித்து கட்டித்தழுவி ஆதரவு தெரிவித்தார். இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Tags :
AlluArjunfreindshipgoalgirlfanpolicecasevijaydevarakondaa
Advertisement
Next Article