For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

' #TheGoat ' பட வசூல் வேட்டை… படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்!

09:58 PM Oct 12, 2024 IST | Web Editor
   thegoat   பட வசூல் வேட்டை… படக்குழு கேக் வெட்டி கொண்டாட்டம்
Advertisement

கோட் திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், தயாரிப்பாளர் அர்ச்சனா, தமிழ்நாடு விநியோகஸ்தர் ராகுல் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Advertisement

விஜய்யின் அரசியல் வருகைக்கு பின், திரைக்கு வந்த திரைப்படம் ‘தி கோட்’. லியோ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது திரைப்படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ்’ படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கினார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள் : ‘#GameChanger’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடிக்குமேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் அக். 3ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

https://twitter.com/mynameisraahul/status/1845094751738986728

இந்நிலையில், இந்த திரைப்படம் திரையரங்க பங்கீட்டுத் தொகையாகவே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் நடிகர் விஜய், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா, தமிழ்நாடு விநியோகிஸ்தர் ராகுல் ஆகியோர் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.இது தொடர்பான வீடியோ பதிவை தமிழ்நாடு விநியோகிஸ்தர் ராகுல் தனது எஃஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement