பாலிவுட் படத்தில் நடிகர் சூர்யா...! - ஷூட்டிங் எப்போது...?
நடிகர் சூர்யா பாலிவுட்டில் உருவாகவுள்ள கர்ணா படத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில் படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளார். படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில், அதற்கேற்ப தற்போது தன்னுடைய தோற்றத்தை மாற்றியுள்ளார் சூர்யா.
இந்தப் படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், தற்போது விடுதலை 2 படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட இந்தப் படத்திற்காக டெஸ்ட் சூட் உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில்,. படம் ரசிகர்களின் அதிகப்படியான கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கு முன்னதாகவே பாலிவுட்டில் உருவாகவுள்ள கர்ணா படத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே பாலிவுட்டில் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையின் பின்புலத்தில் கர்ணா என்ற படத்தில் நடிக்க சூர்யா கமிட்டாகியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாக படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆனந்த் நீலகண்டன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் அப்டேட் தெரிவித்துள்ளார். படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் மும்பையில் துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். படத்தின்
தொடர்ந்து மும்பையில் ஒரு வாரம் இந்தப் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் ஆனந்த் நீலகண்டன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீண்டும் சூர்யா 43 படத்தின் சூட்டிங்கில் சூர்யா இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மிகுந்த பிரம்மாண்டமான அளவில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது மிகவும் துரிதமாக நடந்து வருகிறது. இந்தப் படம் இந்தியில் உருவாகி தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.