For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘கங்குவா’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா!

08:15 PM Jan 10, 2024 IST | Web Editor
‘கங்குவா’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சூர்யா
Advertisement

கங்குவா திரைப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார். 

Advertisement

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டியும் (நடராஜ்) நடிக்கின்றனர்.

கங்குவா உலகளவில் 38 மொழிகளில் வெளியாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார். படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் மும்பை, கொடைக்கானல், சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. ஐதராபாத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும் இப்படம் அடுத்தாண்டு மத்தியில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கங்குவா திரைப்படத்தில் தனது காட்சிகளை நடித்து முடித்துள்ளதாக நடிகர் சூர்யா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கங்குவா திரைப்படத்தில் என கடைசி காட்சியை நடித்து முடித்துள்ளேன். படப்பிடிப்பு தளமெங்கும் நேர்மறையான சிந்தனை பரவியிருந்தது. படபிடிப்பின் முடிவு பலவற்றின் தொடக்கமாகும். அழகிய நினைவுகளை தந்த இயக்குநர் சிவாவிற்கும் அவரது குழுவிற்கும் நன்றி. கங்குவா தனிச்சிறப்பு மிக்கது. வெள்ளித்திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

Tags :
Advertisement