For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி” - நடிகர் சூரி நெகிழ்ச்சி!

09:54 PM Jun 14, 2024 IST | Web Editor
“இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி”   நடிகர் சூரி நெகிழ்ச்சி
Advertisement

“அண்ணே மறக்க மாட்டேன். விடுதலைக்கு முன்.. விடுதலைக்கு பின்.. என்று மாறி விட்டது” என நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறனுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

Advertisement

துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, சசிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் கருடன். இந்த படத்தின் வெற்றிவிழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் இன்று (ஜூன் 14) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சூரி, சசிக்குமார், சமுத்திரக்கனி, இயக்குநர்கள் வெற்றிமாறன், ஆர்வி உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி,

“இந்த மேடைக்கு வருவது ஒரு கடினமான விஷயம். அப்படி இருக்க ஒரு கதையின் நாயகனாக இரண்டு படம் நடித்து இந்த மேடைக்கு வந்து விட்டேன். கருடன் பத்திரிகையாளர் காட்சிக்கு வந்த போது ரொம்ப பதட்டமாக இருந்தது. பத்திரிகையாளர் காட்சியின் இடைவேளையில் படம் நன்றாக இருப்பதாக சொல்ல, அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. பயத்துடன் வந்தேன். பயில்வான் ரங்கநாதன் நின்றார். வந்து சூப்பர் என்று சொல்லி விட்டார். எல்லோரும் கொண்டாடிவிட்டார்கள். ஓப்பனிங் ஷோ நன்றாக இருந்தது.

யுவன் சங்கர் ராஜா படம் பார்த்து விட்டு பாராட்டினார். வெற்றிமாறன் கிட்ட ஒருவர் எடிட்டராக வேலை செய்துவிட்டால், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் நன்றி.

என் வாழ்க்கை, விடுதலைக்கு முன், விடுதலைக்கு பின் என்று மாறிவிட்டது. உங்களை நான் மட்டும் இல்லாமல் என் குடும்பமே திரும்பி பார்க்கும். சசிக்குமாருடன் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறேன். அவர் எப்போதும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை. எனக்காக
நீங்க வந்தீங்க. எனக்கு எப்போதும் நீங்க தான் ஹீரோ” என கூறினார்.

Tags :
Advertisement