சிங்கம் மற்றும் புலியை தத்தெடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் அமரன். அமரன்' படத்தை அடுத்து ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் ‛மதராஸி' மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‛பராசக்தி' படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
1965களில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்ட கதையில் பராசக்தி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, பிரித்திவி ராஜ், குரு சோமசுந்தரம், பஷில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் தத்தெடுத்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஸ்ரேயர் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் 3 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அதாவது இவற்றின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவை சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொண்டுள்ளார். இதனை பூங்கா நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.