Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
04:40 PM Apr 19, 2025 IST | Web Editor
Advertisement

போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த கேரளா மாநில காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது, அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் காவல்துறையினர் போதைப் பொருள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ 3வது மாடியில் இருந்து தப்பி ஓடினார்.

Advertisement

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் கண்ட காவல்துறையினர், அவரை விசாரணைக்கு அழைக்க நோட்டீஸ் அனுப்பி எர்ணாகுளம் வடக்கு காவல் துணை ஆய்வாளர் முன் ஆஜராக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.  இது குறித்து காவல்துறையினர், மருத்துவ பரிசோதனைக்கு பின் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அவர் மீது NDPS சட்டப்படி 27, 29 ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அவர் வெளியிடப்படாத 'சூத்ரவக்யம்'  படத்தின் படப்பிடிப்பு தளத்தில்  போதைப்பொருள் பயன்படுத்தியாக சக நடிகர்கள் AMMA சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
ernakulamMalayalam ActormollywoodShine Tom Chacko
Advertisement
Next Article