Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் சதீஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் #SattamEnKaiyil - கிளிம்ஸ் வீடியோ வெளியீடு!

07:42 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சதீஷ் ஆக்‌ஷன் ஹீரோவாக கலக்கும் “சட்டம் என் கையில்” திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 2006-ம் ஆண்டு கிரேசி மோகன் எழுத்தில் வெளியான "ஜெர்ரி" என்ற திரைப்படத்தில் நடித்தார் சதீஷ். பின்னர் சிவா நடிப்பில் வெளியான “தமிழ் படம்” நடிகர் சதீஷுக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது. அந்த படத்தில் சதீஷ் நகைச்சுவை வில்லனாக நடித்தார்.

தொடர்ச்சியாக தமிழில் மதராசபட்டினம், வாகை சூடவா, தாண்டவம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து டாப் நகைச்சுவை நடிகராக மாறினார் சதீஷ். விஜய், தனுஷ் மற்றும்  சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களோடு இணைந்து கலக்கி வந்த சதீஷ், கடந்த 2023-ம் ஆண்டு முதல் தமிழ் திரை உலகில் நாயகனாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கண்ணை நம்பாதே, துடிக்கும் கரங்கள், வித்தைக்காரன் மற்றும் காஞ்சுரிங் கண்ணப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்த சதீஷ், 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் தான் “சட்டம் என் கையில்”. இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் ஹீரோவாக இப்படத்தில் சதீஷ் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை சதீஷ் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில், “எங்கள் புது முயற்சி… உங்கள் பார்வைக்கு.." எனவும் மேலும், டீசர் விரைவில் வெளியாகும் எனவும் பதிவிட்டு அத்துடன் படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சுமார் 2 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு, இந்த திரைப்படம் வருகின்ற செப். 20-ம் தேதி வெளியாகவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ActionCinema updatesNews7Tamilnews7TamilUpdatesSathishTeaser
Advertisement
Next Article