வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்!
12:04 PM Nov 12, 2023 IST | Student Reporter
Advertisement 
வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement 
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதையும் படியுங்கள்: சென்னையில் தொடர்ந்து காற்று மாசு அதிகரிப்பு! காற்றின் தரக்குறியீடு மாநகர் முழுவதும் 190 – வரை கூடியது!!
நடிகர் ரஜினிகாந்தை காண சிறுவர் முதல் பெரியர்கள் வரை சென்றிருந்தனர். இதனை அடுத்து ரசிகர்களை பார்க்க வந்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அதோடு ரசிகர்களுக்கு லட்டு வழங்கியும், தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.