For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹைதராபாத்தில் நாளை தொடங்குகிறது 'கூலி' படப்பிடிப்பு!

01:32 PM Jul 04, 2024 IST | Web Editor
ஹைதராபாத்தில் நாளை தொடங்குகிறது  கூலி  படப்பிடிப்பு
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி'  திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை  ஹைதராபாத்தில் தொடங்குகிறது.

Advertisement

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ அக். 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘கூலி’  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. அதில், தங்கக் கடத்தல் பின்னணியில் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நாளை (ஜூலை - 5) தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக, நடிகர் ரஜினி இன்று சென்னையிலிருந்து ஹைதராபாத் கிளம்பியுள்ளார்.

Tags :
Advertisement