'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்!
கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இதையும் படியுங்கள் : Gold Rate | மீண்டும் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. சமீபத்தின் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, நடிகர் ரஜனிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஜெயிலர் 2 படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பு முடிய டிசம்பர் ஆகிவிடும். படம் நன்றாக வந்துள்ளது" என தெரிவித்தார்.