For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அம்பானி இல்ல திருமண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த்!

04:57 PM Mar 03, 2024 IST | Web Editor
அம்பானி இல்ல திருமண கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த்
Advertisement

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யவுடன் கலந்து கொண்டுள்ளார்.

Advertisement

பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லமான அன்டில்லாவில் குஜராத் மாநில பாரம்பரியப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.இந்த விழாவில் பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரியானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி உள்ளிட்ட ஏராளமான உலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அதேபோல், இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, சானியா நேவால், அட்லீ ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிலையில், அம்பானி இல்ல திருமண கொண்டாட்ட நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, மகள் ஐஸ்வர்யா உடன் கலந்துகொண்டுள்ளார். அவர்கள் ஜாம்நகர் சென்றிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags :
Advertisement