Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு இலவசமாக ஸ்கூட்டிகள் வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ்!

01:30 PM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினர் ஒவ்வொருவருக்கும் ஸ்கூட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

Advertisement

நடிகர்,  இயக்குநர்,  தயாரிப்பாளர்,  நடன இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.  அவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.  இதில் பென்ஸ் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார்.  ரெமோ,  சுல்தான் போன்ற படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்க உள்ளார்.  இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு படமான ஹண்டர் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது.  இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தை வெங்கட் மோகன் இயக்க உள்ளார்.  இவர் ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்கியா படத்தை இயக்கியவர் ஆவார்.  இது நடிகர் ராகவா லாரன்ஸின் 25வது படம் என்பதால் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க உள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் ராகவா லாரன்ஸ்,  ஏழை எளியோருக்கு உதவி செய்யத் தவறுவதில்லை.  அந்த வகையில் அண்மையில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் கலக்கிய மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு,  அவர்களுக்கு பைக் வாங்கி கொடுப்பதாகவும் வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார். அதுமட்டுமின்றி அவர்களை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார்.

 

 

இந்த நிலையில்,  தான் சொன்னபடியே தற்போது முதற்கட்டமாக மல்லர் கம்ப கலையில் கலக்கிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு புது ஸ்கூட்டிகளை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.  ராகவா லாரன்ஸ் செய்த உந்த உதவியால் கண்கலங்கிய மாற்றுத்திறனாளிகள் அவர் தங்களுக்கு கடவுள் போல் உதவி இருப்பதாக கண்ணீர்மல்க தெரிவித்தனர்.  தற்போது பைக் வாங்கிக் கொடுத்துள்ள நிலையில்,  அடுத்தக்கட்டமாக வீடும் கட்டி தருவேன் என ராகவா லாரன்ஸ் உறுதிபட கூறி இருக்கிறார்.  இதனால் மாற்றுத்திறனாளிகள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags :
BenzBikeslawrenceraghava lawrence
Advertisement
Next Article