For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்!

07:22 PM Jul 20, 2024 IST | Web Editor
 கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்
Advertisement

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் பிரபல மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஜெயிலர் பட ப்ளாக்பஸ்டர் வெற்றியால் ரஜினிகாந்தும், ரஜினி ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ள வேகத்தில் வேட்டையன், கூலி என அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது. வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

இந்த ‘கூலி’ படத்தில் பிரபல மலையாள நடிகர் சௌபின் சாஹிர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்று தமிழிலும் வரவேற்பு பெற்ற படங்களான மஞ்சுமெல் பாய்ஸ், ரோமஞ்சம், வைரஸ், பிரேமம் போன்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற கோல்ட், சி.பி.ஐ. 5, இருள்,  ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், கும்பலாங்கி நைட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபகாலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர் சௌபின் கூலி படத்தில் நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

கூலி படத்தில் ரஜினிகாந்தின் கெட்டப்பும் வரவேற்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கூலி படத்தில் நடிகர் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், மகேந்திரன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement