ஓயாத வங்கதேச கலவரம்! நடிகரும் அவரது தந்தையும் அடித்துக்கொலை!
வங்கதேசத்தில் நடிகர் ஷாண்டோ கான் மற்றும் அவரது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இந்த நிலையில், வங்க தேசத்தில் நடைபெற்று வரும் வன்முறைக்கு மத்தியில் வங்கதேச நடிகர் சாந்தோ கான் மற்றும் அவரது தந்தை செலிம் கானை கும்பல் ஒன்று அடித்து கொலை செய்துள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான செலிம் கான் பல படங்களை தயாரித்துள்ளார். அந்நாட்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ஒரு படத்தையும் செலிம் கான் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் மூலம் செலின் கான் தனது மகன் சாந்தோ கானை நாயகனாக சினிமாத்துறையில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வந்தார். சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றச்சாட்டில் செலிம் கான் கைதாகி ஏற்கனவே சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.