Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் ஃபகத் ஃபாசில் பிறந்தநாள்: வேட்டையன் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

12:04 PM Aug 08, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ஃபகத் ஃபாசில் பிறந்தநாளை முன்னிட்டு ‘வேட்டையன்’ படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Advertisement

‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்குப் பிறகு டி.ஜே.ஞானவேல் இயக்கி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா தகுபதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் திருவனந்தபுரம், சென்னை,மும்பை, ஐதராபாத் போன்ற பல பகுதிகளில் பல கட்டங்களாக நடந்து வந்த நிலையில் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சில வாரங்களுக்கு முன் முடிந்தது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : ஆம்ஸ்ட்ராங் கொலை – வேலூர் சிறையில் இருந்து ஸ்கெட்ச்? வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னதாக நடிகர் கலந்து கொண்டு தனக்கான வசனங்களைப் பேசி முடித்தார். இந்த நிலையில், இன்று நடிகர் ஃபஹத் ஃபாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு வேட்டையன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Tags :
#VettaiyanFAFAFahadFazilhbdFahadFasilHBDFahadhFaasil
Advertisement
Next Article