For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' டீசர் வெளியீடு!

09:53 PM Apr 11, 2024 IST | Web Editor
நடிகர் துல்கர் சல்மானின்  லக்கி பாஸ்கர்  டீசர் வெளியீடு
Advertisement

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். அவரது திறமை மற்றும் தனித்துவமான படங்கள் தேர்வு மூலம் இன்று அவர் பெரும் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.‘சீதா ராமம்’ போன்ற கிளாசிக் மற்றும் ‘கிங் ஆஃப் கொத்தா’ போன்ற கேங்ஸ்டர் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இப்போது தெலுங்கில் திறமையான இயக்குநரான வெங்கி அட்லூரியுடன் ‘லக்கி பாஸ்கர்’ என்ற தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : “மலேசியாவில் இளைஞரை தனி அறையில் வைத்து சித்ரவதை செய்யும் ஹோட்டல் உரிமையாளர்!” – மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர் மனு!

சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து இத்திரைபடத்தைத் தயாரிக்கின்றனர்.  இந்த திரைபடத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் வரும் ஜூலை மாதம் படம் வெளியாகுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement