Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்!

09:51 PM Dec 14, 2023 IST | Web Editor
Advertisement

கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவராக நடிகர் தேவன் ஸ்ரீநிவாஸன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் அறிவித்துள்ளார்.

Advertisement

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் தென்னிந்திய மொழிகளில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'பாட்ஷா' படத்தில் வில்லனாக நடித்துள்ள இவர், கடந்த 2004-ம் ஆண்டு 'கேரள மக்கள் இயக்கம்' என்ற கட்சியை துவக்கி தேர்தல்களில் போட்டியிட்டு வந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு தனது கட்சியை பாஜகவுடன் இணைத்தார்.

இந்நிலையில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன், கட்சியின் மாநில துணைத்தலைவராக தேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இருமுறை சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ள தேவன், இதுவரை எந்த தொகுதியிலும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் மாநில துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தேவனுக்கு, பாஜகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

2013-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, கேரள பாஜகவில் ஏராளமான நடிகர்கள் இணைந்தனர். அதில் பலரும் தற்போது பாஜகவை விட்டு விலகிவிட்ட நிலையில், நடிகர்கள் சுரேஷ்கோபி, தேவன் ஆகியோர் பாஜகவில் தொடர்ந்து இருந்து வருகின்றனர். இதில் சுரேஷ் கோபிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தேவனுக்கு கட்சியில் மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
actorBJPDevanDevan SreenivasanKeralaNews7Tamilnews7TamilUpdatesvice president
Advertisement
Next Article