For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘#Thalapathy69’ படத்தில் இணைந்தார் பாலிவுட் நடிகர் பாபி தியோல்!

05:24 PM Oct 01, 2024 IST | Web Editor
‘ thalapathy69’ படத்தில் இணைந்தார் பாலிவுட் நடிகர் பாபி தியோல்
Advertisement

விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

நடிகர் விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. ' தி கோட்' திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தனது கடைசி திரைப்படத்தில் இயக்குநர் வினோத்துடன் கைக்கோர்த்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :“இந்திய – சீன எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைமை பதற்றமாகவே உள்ளது” | ராணுவத் தலைமை தளபதி உபேந்திர திவேதி!

இந்த திரைப்படத்தை கேவிஎன் புரொடக்ஸன்ஸ் தயாரிக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். ‘தளபதி 69’ திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த நிலையில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி திரைப்படத்தில் நடிக்கவுள்ள, கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு இன்று(அக். 1) முதல் அக். 3 வரை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘தளபதி 69’ திரைப்படத்தில் நடிகர் பாபி தியோல் இணைந்துள்ளதாக கேவிஎன் புரொடக்ஸன்ஸ் அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது. பாபி தியோல் 'அனிமல்' படத்தின் மூலம் கவனம் பெற்றார். சூர்யாவின் 'கங்குவா' படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement