For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகர் அருண் விஜய் பிறந்தநாள் - புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த வணங்கான் படக்குழு...

12:07 PM Nov 19, 2023 IST | Web Editor
நடிகர் அருண் விஜய் பிறந்தநாள்   புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த வணங்கான் படக்குழு
Advertisement

இன்று நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

Advertisement

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது ‘வணங்கான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.  இந்நிலையில்,  இன்று நடிகர் அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.  

முன்னதாக ‘வணங்கான்’ படத்தில் சூர்யா நடிக்க முடிவு செய்து, படத்திற்கான படப்பிடிப்பும் நடந்தது. அப்போது இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்து வந்தார். பிறகு, இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக சூர்யா மற்றும் 2டி நிறுவனம் அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலில் இயக்குனர் பாலா வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement