துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ள அஜித் தமிழ் சினிமாவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராக உள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நடிப்பு மட்டுமின்றி ரேஸிங்கிலும் ஆர்வம் கொண்ட அஜித் குமார் சொந்தமாக ரேஸிங் பந்தய அணையையும் உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் திருப்பூரில் உள்ள கொங்குநாடு ரைபிள் கிளப்பில், துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக அஜித் குமாரின் மேளாலர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள வீடியோவில் அஜித்குமார் கொங்குநாடு ரைபிள் கிளப்பின் நிறுவனர் செந்தில் குமார் உடன் இணைந்து, பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.