Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித்!

08:15 PM Jan 17, 2024 IST | Web Editor
Advertisement

விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித்குமார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

அஜித்தின் நடிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ் என பலர் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து அவ்வப்போது புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியான வண்ணம் இருக்கின்றன. படம் வெளியாவது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

இதில் நடிகை த்ரிஷாவும் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல். விடாமுயற்சி படத்திற்குப் பின் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் புதிய தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பொங்கல் அன்று இப்படத்திற்கான அலுவலக பூஜை சென்னையில் நடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் - ஆதிக் கூட்டணி உறுதியாகியுள்ளது. மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ளது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Adhik Ravichandranajithajith kumarak 62azerbaijanCinema updatesMagizh ThirumeniNews7Tamilnews7TamilUpdatesVidaaMuyarchi
Advertisement
Next Article