Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மருத்துவம் படித்தவருக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை” - செல்வப்பெருந்தகை பதிலடி

கோமியத்தை அமிர்தநீர் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.
10:01 PM Jan 21, 2025 IST | Web Editor
Advertisement

சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி  சமீபத்தில் மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மாட்டின் கோமியம் மருத்துவ குணம் கொண்டது என்று பேசியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலர் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் ஐஐடியின் இயக்குநர் காமகோடியின் கருத்து ஆதரவாக கருத்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று(ஜன.21) செய்தியாளர்களை சந்தித்த அவர், மாட்டின் கோமியத்தை 'அமிர்த நீர்' என்றும் மாட்டின் சாணத்திலும் கோமியத்திலும் கிருமி நாசினி இருக்கிறது என்றும் பேசியிருந்தார். மேலும் மாட்டின் கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து எனக் குறிப்பிட்ட அவர் இது ஆராய்ச்சிபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி மாட்டரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது தொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், “ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?

மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும்போது சொல்லமுடியுமா? வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

Tags :
#TamilisaiSoundarajanchennai IITDirector V KamakotiSelvaperundhagai
Advertisement
Next Article