For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மாநில சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்!“ #TVK செயல் திட்டங்கள் சொல்வது என்ன?

07:21 PM Oct 27, 2024 IST | Web Editor
“மாநில சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும் “  tvk செயல் திட்டங்கள் சொல்வது என்ன
Advertisement

தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் தவெகவின் செயல் திட்டங்களை அக்கட்சி தொண்டாரான கேத்தரின் பாண்டியன் வெளியிட்டார்.

Advertisement

தமிழக மக்கள், அரசியல் கட்சியினர் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று ( அக்.27ம் தேதி) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் தவெகவின் தொண்டர்களே அறிவிப்பார்கள் என அக்கட்சியின் தலைவர் விஐய் தெரிவித்திருந்தார். அதன்படி, தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைகள் தவெகவின் தொண்டரான பேராசிரியர் சம்பத்குமார் வெளியிட்டார். தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் செயல் திட்டங்களை தவெகவின் தொண்டரான கேத்தரின் பாண்டியன் அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : TVKMaanadu | தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் என்னென்ன? முழு விவரம் இதோ!

தவெக செயல் திட்டம்

நிர்வாக சீர்திருத்தம் :

1.அரசு மற்றும் தனியார் துறை அரசியல் தலையீடு என்பது எவ்வகையிலும் எவ்வடிவிலும் இருக்கவே கூடாது அந்த உறுதிப்பாட்டை நிலை நிறுத்தி லஞ்ச லாவண்யம் ஊழலற்ற நிர்வாகத்திற்கு வழி வகுக்கப்படும்.

2. சாதி, மத மற்றும் பாலின சார்பின்மை அரசு நிர்வாகத்தில் வழிகாட்டும் வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும்.

3. அரசு நிர்வாகம் எப்போதும் முற்போக்கு சிந்தனை உடைய அரசியல் சார்ந்ததாக பன்முகை தன்மையுடனும், சட்ட மற்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறை படுத்தப்படும்.

4. அரசை மக்கள் எளிதில் அணுகக்கூடிய வசதிக்காக உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல மதுரையில் தலைமைச் செயலக கிளை அமைக்கப்படும்.

சமூக நீதி :

1.சமூக நீதி, மதச்சார்பின்மை, கோட்பாடுகள் செயல்படுத்தப்படும்.

2.சமதர்ம சமத்துவ கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையிலும் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.

3. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதச்சார இட பங்கீடு அளிக்கப்படும்.

4. சாதி, மதம் மற்றும் மொழி வழி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மற்றும் சகோதரத்துவ சூழலை பட்டியலின பழங்குடி மக்களை முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மக்களுக்கு முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

மொழி கொள்கை :

1. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கை மட்டுமே தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஏற்ற கொள்கை.

2. தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி, வழிகாட்டும் மொழி என்பது உறுதி செய்யப்படும்.

3. தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் தமிழை வழக்காடு மொழியாக உரிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

4. தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ் மொழி கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிகம் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் உறுதி செய்யப்படும்.

5. கீழடி மற்றும் கொந்தகை அதை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பழந்த தமிழரின் வைகை நதி நாகரிகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும்.

மாநில உரிமை :

1. மாநில தன்னாட்சி உரிமைக் கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட அழுத்தம் கொடுக்கப்படும்.

2. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆளுநர்கள் செயல்பாடுகள் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பான நீடிப்பதால் ஆளுநர் பதவி என்பது தேவையா என்ற கேள்வி எழும்பியுள்ளது. மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் ஆளுநர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்.

மகளிர் நலன் :

1. தமிழக வெற்றி கழகத்தில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும். மேலும், படிப்படியாக 50 விழுக்காடு என்ற நிலை பெண்களுக்கு வழங்கப்படும்.

2. அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும்.

3. பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்பிற்கு தனி துறை உருவாக்கப்படும்.

4. மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது போல மாவட்ட தோறும் மகளிர் காண மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்கள் தனித்தனியாக அமைக்கப்படும்.

பகுத்தறிவு மற்றும் தீண்டாமை :

1.மனித குல அழிவிற்கு வழிவகுகின்ற உடல் மன குண நலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும்.

2. தீண்டாமை என்பது குற்றம். தீண்டாமையை கடைபிடிப்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வி :

1. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி அரசு பள்ளிகள் ஒன்று உருவாக்கப்படும்.

2. உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விக்கான தரம் உயர்த்தப்படும்.

3. தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தனியாக அரசுப் பலகைகளை கழகம் உருவாக்கப்படும்.

மருத்துவம் :

1. மாவட்ட அளவில் அரசு பன்நோக்கு மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தரம் உயர்த்தப்பட்டு அங்கே போதுமான மருத்துவ பரிசோதனைகள் செய்ய வசதிகள் உருவாக்கித் தரப்படும்.

3. புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனைகள் நிறுவப்படும்.

விவசாயம் :

1. விவசாய விற்பனை விலை மற்றும் நுகர்வோர் வாங்கும் நிலை இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறை நடைமுறைப்படுத்தப்படும்.

2. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

3.அதைபோல ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சதுப்பு நிலங்கள், விவசாய நிலங்கள் மீட்டெடுக்கப்படும்.

4. அதிகாரி கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் நீர் தேக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்படும்.

5. தமிழர்களின் மரபு வழி தொழிலாளர் பனைத் தொழில் மேம்படுத்தப்படும்.

6. ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்.

7. நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும்.

8. பள்ளி மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சீருடைகள் நெசவாளர்களிடமிருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

9. மண்பாண்ட தொழிளார்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பானைகளை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு :

1. தமிழ்நாட்டில் மணல் கொள்ளை, கனிமவளங்கள் கொள்ளை போன்றவற்றைத் தடுக்க சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயக்கப்படும்.

2. நகர, கிரம பேதம் களைய மாநகரங்களில் மக்கள்தொகையை குறைக்க மற்ற பகுதிகள் வளர்ச்சியடைய மண்டல வாரியான பகுதிசார் வளர்ச்சி பரவலாக்கம் வழியாக மண்டல வாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்.

3. தொழிற்சாலைகள் உரிய விதிகளை பின்பற்றுவதையும், அவற்றின் கழிவுகள் அனுமதிக்கப்பட்ட அளவை மீறாமல் இருப்பதை கண்காணிக்கும்.

4. பொறுப்பில் இருக்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் செயலிழந்து இருப்பதால், அந்த அமைப்பு இனி சீரமைக்கப்படும்.

5. வனவிலங்குகள், பறவைகள் மற்றும் அழியக்கூடிய அபாய நிலையில் இருக்கக்கூடிய அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்க வனப்பரப்பளவு அதிகரிக்கப்படும்.

6. போதைப் பொருட்களை ஒழிக்கச்சிறப்புச் சட்டம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு தவெகவின் செயல் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

Tags :
Advertisement