“குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - விசிக புகார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு, ‘உங்களுடைய சேரி மொழியில் எல்லாம் பேச முடியாது’ என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், குஷ்பு மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
விசிக துறைமுகம் தொகுதி அமைப்பாளர் கார்த்திக் கொடுத்துள்ள அந்த புகார் மனுவில், “தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு சுந்தர் X தளத்தில் ‘சேரி மொழியில் பேசத் தெரியாது’ என்று சொல்லி பதிவிட்டது, என்னையும் நான் சார்ந்திருக்கின்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும், 2000 ஆண்டு காலமாக எமது மக்கள் குடியிருந்து வரும் பகுதியில் பேசுகின்ற மொழியையும் அவமானப்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : BTS ஜங்கூக்கின் ‘3D’ பாடலின் ரீமிக்ஸ் - ஜஸ்டின் டிம்பர்லேக் வெர்ஷனுக்கு ரசிகர்கள் அதிருப்தி
இதனால் மிகுந்த மனஉளச்சலுக்கும் மனவேதனைக்கும் நான் உள்ளாகியிருக்கிறேன். மேலும் மொழியால் சேரியில் பேசுகின்ற மொழி வன்மம் கொண்ட மொழி என்றும் தீண்டத்தகாத மொழி என்றும் பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி X சமூக வலைதளத்தில் பதிவிட்ட குஷ்பு மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.