வரவேற்பை பெற்ற அஞ்சலி ஷர்மாவின் ஒரு நபர் நாடகம்!
காஸாவின் போர் நிகழ்வுகளை மையமாக வைத்து நடித்த நடிகை அஞ்சலி ஷர்மாவின் ஒரு நபர் நாடகம் பலரையும் ஈர்த்துள்ளது.
நடிகை அஞ்சலி ஷர்மா நெட்ஃபிக்ஸ் திரைப்படமான 'ஆப்ரேஷன் மேபேர்' மூலமாக பிரபலமானவர். இவர் தொடர்ந்து, காஸாவின் போர் நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு நபர் நாடகத்தில் நடித்துள்ளார். இந்த நாடகம் பலரையும் ஈர்த்துள்ளது. இந்த நாடகத்தின் இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் அதுல் குமார்.
பாலஸ்தீனர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்த நாடகம் அமைந்துள்ளது. இந்த நாடகம், அம்மக்களுக்கு நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்குத் தீர்வாக நீதி, சமத்துவம் மற்றும் விடுதலை ஆகியவற்றைப் பேசுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!
இது குறித்து அஞ்சலி ஷர்மா கூறுகையில், "இந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அர்ப்பணிப்பு மிக்க பயிற்சியைக் கோருவதாக இருந்தது. வசனங்களும், உணர்ச்சிகளும் சவால் மிகுந்ததாக இருந்தன. இது ஒரு நல்ல கற்றல் சார்ந்த அனுபவம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நாடகம் 2010-ல் அஸ்தர் தியேட்டர் சார்பில் எழுதப்பட்டது. இந்த நாடகம் துல்லியமான காட்சிப்படுத்தல் மூலமாகவும், உண்மைத்தன்மையாலும் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.