விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக தண்ணீர் திறக்க முடிவு...!
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணையிலிருந்து 2 டிஎம்சி தண்ணீரை கடந்த 3ஆம் தேதி முதல் திறந்து விட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி பிப்ரவரி 9ஆம் தேதி வரை நாளொன்றுக்கு 5000 கனஅடி வீதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்வளத்துறை - செய்தி வெளியீடு#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@katpadidmk @mp_saminathan pic.twitter.com/zCQOcGoc8y
— TN DIPR (@TNDIPRNEWS) February 9, 2024
இந்நிலையில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள பாசன நிலங்களுக்கு கடைமடை வரை செல்ல ஏதுவாக கால நீட்டிப்பு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததாகவும், எனவே மேட்டூர் அணையிலிருந்து ஒரு நாள் கூடுதலாக அதாவது வரை தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.