Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன்” - #Iltija Mufti-யின் எக்ஸ் தளப்பதிவு!

01:15 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக மெஹபூபா முஃப்தியின் மகள் இல்திஜா முஃப்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு செப்.18, 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.

ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன. தற்போதைய நிலவரப்படி, ஜம்மு-காஷ்மீரில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி(இந்தியா கூட்டணி) முன்னிலை பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான மெஹபூபா முப்தா போட்டியிடாத நிலையில், ரீகுஃப்வாரா-பிஜ்பெஹாரா தொகுதியில் அவரது மகள் இல்திஜா முஃப்தி முதல்முறையாக போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையில் தற்போது அவர் பின்னடைவில் இருந்து வருகிறார். இதையடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

“மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன். பிஜ்பெஹாராவில் உள்ள அனைவரிடமிருந்தும் நான் பெற்ற அன்பும், பாசமும் எப்போதும் என்னுடன் இருக்கும். இந்த தேர்தலுக்காக கடுமையாக உழைத்த எனது கட்சியினருக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
Iltija MuftiJammu and Kashmir
Advertisement
Next Article