Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெறிச்சோடிய மதுரை "மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்" | பொதுமக்கள் அவதி...!

07:34 AM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மதுரை "மாட்டுத்தாவணி பேருந்துநிலையம்" வெறிச்சோடி காணப்படுகிறது.  

Advertisement

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட நிறைவேற்றப்படாமல் உள்ள கடந்த 8 ஆண்டுகால கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்ககள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், இன்று நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.

அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தொமுச, ஏஐசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பேருந்து நிலையமான மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தத்தால் 900ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் 10 சதவீத பேருந்துகள் கூட இயங்கவில்லை.  இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 

Advertisement
Next Article