For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Coolie மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இணையும் அமீர் கான்?

03:10 PM Oct 15, 2024 IST | Web Editor
 coolie மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இணையும் அமீர் கான்
Advertisement

ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர்கான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

வேட்டையனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக ரஜினி ஓய்வெடுத்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கிடையே இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இத்தகவல் உண்மை என்றும், சிறப்புத் தோற்றத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் அமீர்கான் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நிறைவு பெற்றது.  அடுத்தகட்ட படப்பிடிப்பு நாளை மறுநாள் சென்னையில் துவங்குகிறது. இதில் ரஜினி சம்மந்தப்பட்ட நிறைய சண்டை காட்சிகள் மற்றும் அமீர் கான் காட்சிகளும் படமாக்கபடுவதாக கூறப்படுகிறது.

Tags :
Advertisement