Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமீர்கான் மகன் நடித்த படத்திற்கு தடையை நீக்கிய குஜராத்  நீதிமன்றம்! ஏன் தெரியுமா?

09:12 AM Jun 22, 2024 IST | Web Editor
Advertisement

பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத்கான் நடித்த ’மகராஜ்’  திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை விலக்கி குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

பிரபல பாலிவுட் நடிகரான ஆமிா்கானின் மகன் ஜுனைத் கான் நடித்த முதல் திரைப்படம் ‘மகராஜ்’.  இப்படம் ஜூன் 14 அன்று  நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருந்தது.  இந்தத் திரைப்படம் 19ம் நூற்றாண்டைச் சோ்ந்த வைணவ மதத் தலைவரும்,  சமூக சீா்திருத்தவாதியுமான கா்சன்தாஸ் முல்ஜி தொடா்புடைய அவதூறு வழக்கை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இதனால் இப்படம் இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாகக் கூறி சிலா் போராட்டம் நடத்தினா்.  மேலும்,  இப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும் குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனா்.  இந்த வழக்கு கடந்த 13ம் தேதி நீதிபதி சங்கீதா விசென் முன் விசாரணைக்கு வந்தபோது,  இப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில்,  இந்த படத்தில் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக எந்த காட்சியும் இடம்பெறவில்லை என்பதை உறுதி செய்த பிறகு,  நீதிபதி சங்கீதா விசென் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டாா்.

Tags :
Amir KhanbollywoodGujaratMaharaj
Advertisement
Next Article