For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Haryana தேர்தல் | ஆம் ஆத்மி 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

02:46 PM Sep 11, 2024 IST | Web Editor
 haryana தேர்தல்   ஆம் ஆத்மி 3 ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Advertisement

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை ஆம் ஆத்மி இன்று வெளியிட்டது.

Advertisement

காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 9ம் தேதி ஆம் ஆத்மி வெளியிட்டது. இதனிடையே ஆம் ஆத்மி தனது இரண்டாவது பட்டியலை நேற்று வெளியிட்டது. இதையடுத்து 11 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியல் இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “புகைப்படம் எடுத்ததை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை” | பி.டி.உஷா மீது மல்யுத்த வீராங்கனை #VineshPhogat குற்றச்சாட்டு!

மூன்றாவது வேட்பாளர் பட்டியலில் ராடௌர் தொகுதியில் பீம் சிங் ரதி, அமர் சிங் (நிலோகேரி), அமித் குமார்(இஸ்ரானா), ராஜேஷ் சரோஹா(ராய்), மஞ்சீத் ஃபர்மானா(கர்கௌடா), பிரவின் குஸ்கானி (கார்ஹி சாம்ப்லா-கிலோய்) ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நரேஷ் பக்ரி (கலனூர்), மகேந்தர் தஹியா (ஜஜ்ஜார்), சுனீல் ராவ் (அடேலி), சதீஷ் யாதவ் (ரேவாரி), மற்றும் கர்னல் ராஜேந்திர ராவத் (ஹாதின்) ஆகியோரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சி தனது இரண்டாவது பட்டியலில், சதௌராவில் இருந்து ரிது பமானியா, தானேசரில் இருந்து கிரிஷன் பஜாஜ், இந்திரில் இருந்து ஹவா சிங், ரதியாவில் முக்தியார் சிங் பாசிகர் மற்றும் ஆதம்பூரிலிருந்து பூபேந்திர பெனிவால் உள்ளிட்ட 9 வேட்பாளர்களை களமிறக்கியது.

Tags :
Advertisement