மதுரை கொடிக்குளம் பள்ளிக்கு கூடுதலாக 91 சென்ட் நிலம் வழங்கிய ஆயி அம்மாள்!
மதுரையை சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம்மாள், கொடிக்குளம் பள்ளிக்கு கூடுதலாக 91 சென்ட் வழங்கியுள்ளார்.
மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். வங்கி ஊழியரான இவர், கொடிக்குளம் அரசுப் பள்ளி விரிவாக்கத்துக்காக தனக்குச் சொந்தமான ரூ.4.50 கோடி மதிப்பிலான 1.50 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
இதுகுறித்து அறிந்த மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், பூரணம் அம்மாளை கடந்த ஜன. 11-ம் தேதி நேரில் சந்தித்து பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். ஆயி அம்மாளை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். இவரின் இந்த மனதிற்காக, முதல்வரின் சிறப்பு விருது இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. மேலும் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆயி அம்மாளை நேரில் சந்தித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில், மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு மேலும் ரூ.3.5கோடி மதிப்புள்ள நிலத்தை ஆயி என்கிற பூரணம் அம்மாள் நன்கொடையாக தந்துள்ளார். இந்த இடத்தை உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டிக் கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியது என்றும், பள்ளி கட்டிடம் கட்டும்பொழுது U.ஜனனி நினைவாக மதுரை கிழக்கு ஒன்றியம், யா.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த P.P.A.கண்ணன் சின்னான், K.ஆயி அம்மாள் இவர்களின் இளைய மகள் U. ஆயிஅம்மாள் என்ற பூரணம் உக்கிரபாண்டியன் அவர்களால் 91 செண்டு தானமாக கொடுக்கப்பட்டது.
மேற்படி ஜனனியின் நினைவாக தானமாக வழங்கிய இடத்தில் பள்ளிக்காக கட்டிடம் கட்டும் பொழுது "ஜனனியின் நினைவு வளாகம்" என்ற பெயர் சூட்டும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.