ஆடித்தபசு திருவிழா - தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!
ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு நாளை தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
11:36 AM Aug 06, 2025 IST | Web Editor
Advertisement
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் உள்ள சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை ஆடித்தபசு திருவிழாவானது கொண்டாடப்பட உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு நாழி உள்ளூர் விடுமுறை வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement
மேலும், அந்த நாளில் அரசு தேர்வுகள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாட்களாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.