Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு வாங்குபவர்களுக்கு ஆதார் அவசியம் - #TTD அறிவிப்பு!

09:46 PM Aug 29, 2024 IST | Web Editor
Advertisement

சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கூடுதல் லட்டு வேண்டும் என்பவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த நடைமுறையே தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது. எனினும், இடைத்தரகர்கள் மூலம் லட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் வாங்க ஆதார் கட்டாயம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்ட தகவலின் படி, “திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வாங்க இன்று முதல் பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் ஆகும். சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல லட்டு விற்பனை செய்யப்படும். சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் வாங்க வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
AadharLadduNews7Tamilnews7TamilUpdatesTirumala TirupatiTirupatiTTD
Advertisement
Next Article