For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே ‘ஆதார் கேஒய்சி’ - மத்திய அரசு விளக்கம்!

10:07 AM Jul 11, 2024 IST | Web Editor
போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே ‘ஆதார் கேஒய்சி’   மத்திய அரசு விளக்கம்
Advertisement

'நாட்டில் போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே, ஆதார் அடிப்படையிலான சுயவிவரம் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

Advertisement

'நாட்டில் போலி சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களை நீக்கவே, ஆதார் அடிப்படையிலான சுயவிவரம் (கேஒய்சி) சரிபார்ப்பு பணியை அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன' என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் முன்வைத்த விமர்சனத்துக்கு அமைச்சர் புரி இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

'சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகஸ்தர்களில் குறிப்பிட்ட சிலரால் போலி வாடிக்கையாளர்களின் பெயரில் வணிக சிலிண்டர்கள் அடிக்கடி முன்பதிவு செய்யப்படுகின்றன. அத்தகைய போலி வாடிக்கையாளர்களை நீக்குவதற்காக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களின் ஆதார் அடிப்படையிலான 'கேஓய்சி' சரிபார்ப்பு பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தப் பணி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. வாடிக்கையாளருக்கு சிலிண்டர்களைக் கொண்டு சென்று வழங்கும் டெலிவரி பணியாளர்கள், தங்கள் கைப்பேசியைப் பயன்படுத்தி கேஓய்சி நடைமுறையை மேற்கொள்கின்றனர்.

அதேசமயம், வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப விநியோகஸ்தர் மையத்தை அணுகியும் அல்லது எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரபூர்வ செயலிகளிலும் கேஓய்சி நடைமுறையை முடித்துக் கொள்ளலாம். இந்த நடவடிகைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசு எந்த கெடுவும் நிர்ணயிக்கவில்லை' என்றார்.

Tags :
Advertisement