For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

அரசு ஆவணங்களில் தனிநபர் ஆதார் தகவல்கள் வேண்டாம் - புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு!

01:01 PM Dec 23, 2023 IST | Web Editor
அரசு ஆவணங்களில் தனிநபர் ஆதார் தகவல்கள் வேண்டாம்   புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு
Advertisement

புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறை ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்களை தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என புதுச்சேரி திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அரசுத்துறை ஆவணங்களில் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் எண்ணை அரசின் பல்வேறு சேவைகளுக்கு இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை பெற்றுத்தான் வருகிறது. அதை அரசுத் துறைகளில் பல்வேறு இணைய வழி ஆவணம் மற்றும் கோப்புகளில் இணைக்கப்பட்டுள்ளது. இதை உடனடியாக நீக்க புதுச்சேரி அரசு திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை உத்தரவிட்டு அனைத்து அரசு துறைக்கும்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு துறைகளில் இணைய வழி ஆவணங்கள் மற்றும் கோப்புகளில் ஆதார் எண் வெளிப்படையாக பகிரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே, அரசு துறை ஆவணங்களில் இணைத்துள்ள ஆதார் எண்ணை உடனடியாக நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என்றும் அத்துடன் ஆதார் எண்ணை இணைய வழி ஆவணங்களை இணைத்துள்ள மீன்வளத்துறை, குடிமை பொருள் வழங்கல் துறை வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

தனிநபரின் பாஸ்போர்ட், பான் கார்டு எண், வங்கிக் கணக்கு என், போல ஆதார் எண்ணும் ஒருவரின் தனிப்பட்ட விவரமாகும். அந்த எண்ணை பொதுவெளியில் பகிர்வதால் பல்வேறு
பாதிப்புகள் தனிப்பட்ட நபருக்கு ஏற்படுவதாகவும், ஆதார் விபரங்களை மற்றவர்களுக்கு பகிர்வது ஆதார் ஆணைய சட்டம் 2016 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இது அடுத்தவர் ஆதார் எண்களை பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என ஆதார் ஆணையும் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : கிருஸ்துமஸ் கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் – விழுப்புரத்தில் போக்குவரத்து நெரிசல்!

ஆனால் புதுச்சேரியில் 20 க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இணைய வழி ஆவணம்
கோப்புகளில் பொதுமக்களின் ஆதார் எண்ணை பொது வழியில் பகிர்ந்துள்ளது. இது
தொடர்பாக வந்த புகாரின் பேரில் பெங்களூரில் உள்ள இந்திய தனித்தன்மை அடையாள
ஆணைய மண்டல அலுவலகம் விசாரணை நடத்தி புதுச்சேரி அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இதனையடுத்து திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை வாயிலாக அனைத்து அரசு
துறைகளுக்கு அவசரமாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஆதார் எண்ணில் 12 இலக்கை
எண்களில் முதல் எட்டு இலக்க எண்களை மறைத்து தான் பொது தளத்தில் வெளியிட
வேண்டும். மேலும், கடைசி நான்கு இலக்க எண்களை வெளிப்படுத்தலாம் எனவே இது சம்பந்தமாக ஆதார் எண் மறைப்பது அல்லது நீக்குவது தொடர்பாக அரசு துறைகள் இன்று முதல் முடிவு எடுத்து உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது கட்டாயமாகியுள்ளது.

Tags :
Advertisement