Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் அத்துமீறிய வாலிபர்.. இந்தூரில் அதிர்ச்சி சம்பவம்

மத்திய பிரதேசம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:49 PM Oct 25, 2025 IST | Web Editor
மத்திய பிரதேசம் இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement

13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் கடந்த புதன்கிழமை இங்கே ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெற்றது.

Advertisement

போட்டியை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி போட்டி முடிந்து மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது. இந்த நிலையில் கடந்த வியாழக் கிழமை அன்று ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபே-க்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை பைக்கில் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் வீராங்கனைகளை விரும்பதகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை  தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர் அகில் கான் என்பவரை கைது செய்துள்ளனர்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்  இந்தியாவில் நடந்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு நடந்துள்ள இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
australiawomentteamHarassmentIndorelatestNewsMathiyaPradesh
Advertisement
Next Article