மனைவியை தேர்ந்தெடுக்க AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இளைஞர்!
ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பொருத்தமான பெண்ணை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.
உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மக்களின் வேலைகளை கூட பறிக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த நிலையில் ரஷ்யாவை சேர்ந்த சாப்ட்வர் டெவலப்பரான அலெக்சாண்டர் ஜாதன் என்பவர் டிண்டர் செயலியில் தனக்கு பொருத்தமான பெண்ணை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார்.
இதையும் படியுங்கள்: மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 6,600 கன அடி நீர் திறப்பு!
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"சுமார் 5,000 பெண்களுடன் சாட் செய்த பிறகு கரினா என்ற பெண்ணை எனக்கு சரியான பொருத்தமாக ஏஐ தொழில்நுட்பம் அடையாளம் காட்டியது. பொருத்தமான பெண்ணை கண்டுபிடிக்க சுமார் 1 வருடம் ஆனது."
இவ்வாறு அவர் கூறினார்.