இண்டிகோ விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற இளைஞர்!
சென்னையில் விமானத்தின் அவசர கால கதவை இளைஞர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
11:01 AM Jul 28, 2025 IST | Web Editor
Advertisement
சென்னையில் இருந்து துர்காப்பூருக்கு 164 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அப்போது ஐஐடி மாணவர் ஒருவர் திடீரென விமானத்தின் அவசர கால கதவை திறக்கும் பட்டனை அழுத்தி திறக்க முயன்றுள்ளார்.
Advertisement
அப்போது மாணவர் கவனக் குறைவால் தெரியாமல் அழுத்திவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் விமானத்தின் அவசர கால கதவை இளைஞர் திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.