தெரியாத பெண்ணின் கன்னத்தை கிள்ளி காதலை சொன்ன வாலிபர்... மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரை, கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
08:57 PM Apr 18, 2025 IST
|
Web Editor
Advertisement
சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் ஒருவர், தேனாம்பேட்டை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த குடிபோதையில் இருந்த வாலிபர் விக்னேஷ், பெண்ணின் கன்னத்தை கிள்ளி ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். இதனால் பெண் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து, மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
Advertisement
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனாம்பேட்டை போலீசாரிடம் விக்னேஷை ஒப்படைத்தனர். விக்னேஷ் எதற்காக அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடந்து சென்ற இளம் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபரால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Next Article