“சகுனிகள் இருக்கும் உலகத்துல யோக்கியனா இருந்தா பிழைக்க முடியாது” -#Vettaiyan இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!
சகுனிங்களா இருக்க இந்த உலகத்துல யோக்கியவனா இருந்தா பிழைக்க முடியாது என வேட்டையன் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் மற்றும் ஞானவேல் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வேட்டையன். தலைவரின் 170 ஆவது திரைப்படமான வேட்டையன் படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது.ரஜினி மற்றும் ஞானவேல் என்ற புது கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. அதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குனர் ஞானவேல் தான்.
அவர் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கமே வேட்டையன் படம் மீதான எதிர்பார்ப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஜெய் பீம் போல ஒரு படத்தை இயக்கிய ஞானவேல் ரஜினியுடன் இணைகிறார் என்றதும் அப்படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்தது. இவ்விழாவில் நடந்த ஹைலைட்டான விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம்
'வேட்டையன்' இசை வெளியீட்டு விழாவில், `ஹிமாச்சல் கழுதை பற்றிய குட்டி கதை:
இது குறித்துப் பேசியிருக்கும் அவர், "இந்தப் படத்தோட இயக்குநர் ஞானவேல் என்கிட்ட ஆறிலிருந்து அறுபது வரை படம் மாதிரி ஒரு நடிகர் ரஜினியை இந்தப் படத்துல பார்க்கணும்னு சொன்னார்.
அதுக்கு நான் அவருக்கு இமாச்சல்ல நடந்த ஓர் உண்மையான கதையைச் சொன்னேன். அங்க வந்து ஒரு ஊர்ல ஒரு டோபி இருந்தார். அந்த ஊர்ல இருக்கிற ஒரு குளத்தைக் கடக்க ஒரு கழுதையைத்தான் யூஸ் பண்ணுவாங்க. ஒரு நாள் அந்தக் கழுதை காணாமல் போயிடுது. அந்த அதிர்ச்சியில அந்த டோபி எல்லாத்தையும் மறந்துடுறார். அப்ப எல்லாரும் சேர்ந்து அவருக்குக் காவி உடை உடுத்தி அவரை சாமியாரா ஆக்கிடறாங்க.
இப்போ ஒரு நாள் கழுதை திரும்ப வந்துடுது. மறுபடியும் அவனுக்குப் பழசெல்லாம் ஞாபகம் வந்திருச்சு. அப்போ எல்லாரும் அந்த டோபி கிட்ட இதையே நம்ம பாத்துக்கலாம்... இந்த வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்றாங்க.
அந்த மாதிரிதான் அந்தப் படங்களோட ஓகே இல்லாத ஃபுட்டேஜஸை நீங்க பார்க்கல. ஒரு படத்துல எஸ்.பி சார் எனக்கு முதல் நாளே 14 பக்கத்துக்கு வசனம் கொடுத்தார். நான் பேசமாட்டேன்னு போயிட்டேன். எல்லோரும் 'திமிரைப் பாருங்க. போகட்டும் விடுங்க'னு சொன்னாங்க.
எஸ்.பி சார் என்னை கூப்பிட்டு, உன்னால முடிஞ்சதை பண்ணு. பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுத்துக்கிறேனு சொன்னார். கமலுக்கு ஸ்ரீ தேவி மாதிரி ஹீரோயின்கூட நடிக்க வச்சாங்க. அப்போ எனக்கு டிராமா நடிகர்களோட நடிக்க வச்சாங்க. அப்படி வெள்ளை தாடி வச்சு ஆறிலிருந்து அறுபது வரை படத்துல நடிச்சேன். அப்புறம் ஒரு மாதிரி நல்ல டிராக்ல போயிட்டு இருக்கு.
சினிமாவுல 50 வருஷமாகப் போகுது. ஒண்ணுமே தெரியாம ட்ரெயின் ஏறி இங்க வந்தேன்... நீங்க கொடுத்த ஆதரவுலதான் இங்க இருக்கேன். இந்தப் படம் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். அவர் நம்ம சினிமாவுக்குத் தேவை." எனக் குறிப்பிட்டார்.
சினிமாவுக்கு வந்து 50 வருசம் ஆகப்போகுது. ஒன்னுமே தெரியாம ரயில் ஏறி இங்கே வந்தேன் நீங்க கொடுத்த ஆதரவால்தான் இங்க இருக்கேன். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு ஏற்ற இயக்குனர்கள் இல்லை. ஒரு வெற்றிக்கு பின் அடுத்த வெற்றியை கொடுப்பதை விட தோல்விக்கு பின் வெற்றிப்படம் கொடுப்பதே ரொம்ப கஷ்டமா இருக்கு. சௌந்தர்யா, ஞானவேல் ஒரு லைன் சொன்னதாக சொன்னார். நான் ‘நீங்க மெசேஜ் சொல்லுவீங்க. நமக்கு அது செட் ஆகாது. மக்கள் கொண்டாடுற மாதிரி கமர்ஷியலா இருக்கணும்னு சொன்னேன்.
10 நாள் டைம் கேட்டார். ஆனால், 2 நாட்களில் போன் பன்னார். நான் கமர்ஷியலா பண்றேன். ஆனால், நெல்சன், லோகேஷ் மாதிரி இல்லாமல் ரசிகர்கள் உங்களை பார்க்கும் வேறொரு கண்ணோட்டத்தில் காட்டுறேன்னு சொன்னார். அப்போ அதுதான் வேணும். அது வேணும்னா நான் நெல்சன், லோகேஷ்கிட்டையே போயிருப்பேன்னு சொன்னேன்.
சகுனிங்களா இருக்க இந்த உலகத்துல யோக்கியவனா இருந்தா பிழைக்க முடியாது. சாணக்கியத்தனமும் இருக்கணும், சமார்த்தியமும் இருக்கணும். ஞானவேல்கிட்ட இது இரண்டும் இருக்கு. மிகவும் சிறப்பாக இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நான் மன்னன் பட ஷூட்டிங்கில் இருந்தபோது குழந்தையாக இருந்த அனிருத்தை சிம்மாசனத்தில் வச்சி போட்டோ எடுத்தேன்.
இன்னைக்கு அந்த அனிருத் இசை சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறார். இன்னைக்கு அவரின் இசை நிகழ்ச்சிகளுக்கு உடனே டிக்கெட்டுகள் தீர்ந்துவிடுகிறது. இந்த படத்திற்கு 100 சதவீதம் அனிருத் வேணும்னு ஞானவேல் சொன்னார். நான் 1000 சதவீதம் அனிருத்தான் வேணும்னு சொன்னேன். சிறப்பான இசையை அவர் கொடுத்திருக்கிறார். சம்பளமே வேணாம்னு சொல்லி இந்த படத்தில் நடிக்க வந்தார் பஹத் பாசில். ஆனால், அவரிடம் கால்ஷீட் இல்லை. அவருக்காக காத்திருப்பதில் தப்பு இல்லை. ஆனால், லோகேஷ் எனக்காக காத்துக்கிட்டு இருக்கார். லோகேஷிடம் ‘கூலி படத்தோட ஷூட்டிங் தள்ளி வச்சிக்கலாமான்னு கேட்டேன். ‘சார் ப்ளீஸ்’ என்றார். அப்போதான் தெரிஞ்சது அவர் இன்னும் கதையே பண்னலன்னு என சிரித்தார் ரஜினி.