Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பழனி கோயில் சன்னதி வீதியில் பெண் ஒருவர் கொலை!

05:30 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

பழனி அடிவாரம் சன்னதி வீதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

Advertisement

பழனி பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம்(45). இவருக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள்
உள்ளனர். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையில்
டீக்கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து(45) என்பவருக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சமீப காலமாக இந்த பெண் மாரிமுத்துவை கைவிட்டு கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.

இதன்காரணமாக, ஆத்திரமுற்ற மாரிமுத்து, இன்று காலை கடையில் இருந்த பஷிரா பேகத்திடம் சென்று தகராறு செய்துள்ளார். மேலும், தான் வைத்திருந்த கத்தியில் பஷீராபேகத்தை வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்‌. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாரிமுத்துவை கைதுசெய்தனார். தொடர்ந்து, இறந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
News7 Tamil UpdatesNews7TamilPALANITamilNaduWomenDeath
Advertisement
Next Article