Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேரளாவில் கழிவுநீர் குழியில் விழுந்து யானை உயிரிழப்பு!

கேரளா அருகே உள்ள மலப்புரம் பகுதியில் பாழடைந்த கழிவுநீர் குழியில் விழுந்த காட்டு யானை பலி...
01:39 PM Feb 27, 2025 IST | Web Editor
கேரளா அருகே உள்ள மலப்புரம் பகுதியில் பாழடைந்த கழிவுநீர் குழியில் விழுந்த காட்டு யானை பலி...
Advertisement

கேரளா மாநிலம் மலப்புரம் சோழமுண்டா பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கழிவுநீர் குழி ஒன்று பாழடைந்த நிலையில் இருந்தது. அந்த வழியாக தோட்ட வேலைக்கு மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் இன்று (பிப். 27) காலை வழக்கம் போல் தோட்ட வேளைக்கு சென்ற தொழிலாளர்கள் அந்த பாழடைந்த கழிவுநீர் குழியில் யானை ஒன்று இறந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் யானையின் உடலை மீட்டனர். யானை வயது மூர்ப்பின் காரணமாக இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணத்தினால் இறந்ததா? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
deathElephantKeralamalapuram
Advertisement
Next Article