தூத்துக்குடியில் களைகட்டும் கிறிஸ்துமஸ் - பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி
பிரசித்தி பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா
கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள புகழ் பெற்ற பனிமய மாதா
பேராலயத்தில் நள்ளிரவில் 12மணிக்கு ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா முன்னிலையில்
சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் உலக நன்மைக்காகச் சிறப்பு
பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர்
ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைப் பரிமாறி உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இதே போல தூத்துக்குடியில் உள்ள முக்கிய தேவாலயங்களான, திரு இருதய மேற்றிராசன
ஆலயம், புனித அந்தோனியார் ஆலயம், தூய பேட்ரிக் தேவாலயம், தூய பேதுரு தேவாலயம்
உள்ளிட்ட நகரின் அனைத்து தேவாலயங்களிலும் இரவு 11.30 மணியிலிருந்தே மக்கள்
வரத் துவங்கினர். புத்தாடை அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்திற்கு வந்த
கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துமஸ் கேரல்
பவனி நடைபெறுவது வழக்கம். வாகனங்களை வண்ண விளக்குகளாலும் அலங்கார
கலைப்பொருட்களாலும் அலங்கரித்துத் துள்ளல் இசை ஒலிக்க இளைஞர்கள் இசைக்கேற்ப
ஆடிப்பாடி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்து கிறிஸ்துமஸ் விழாவை
கொண்டாடுவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பெரும்
பாதிப்புக்குள்ளான காரணமாக இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கேரல் பவனிக்கு நடைபெற
வில்லை. ஏராளமான போலீசார் கிறிஸ்துமஸ் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வருகின்றனர். இந்த ஆண்டு பெய்துள்ள மிக கனமழையின் பாதிப்பிலிருந்து தென்மாவட்ட மக்கள் விரைவில் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
TUT-24-12-23- BHAKTHI- SNOW LADY CHURCH XMAS