ஹங்கேரியில் நடந்த #ChessOlympiad போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய நட்சத்திரங்களுக்கு உற்சாக வரவேற்பு!
ஹங்கேரியில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய நட்சத்திரங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதிச் சுற்றில் இந்திய ஆடவர் அணி ஸ்லோவேனியாவையும், மகளிர் அணி அஜர்பைஜானையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கம் வென்றது.
இதற்கு முன்பு 2014 மற்றும் 2022இல் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, 2020இல் கோவிட்-19 இன் போது நடந்த ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில், ரஷ்யாவுடன் தங்கத்தைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், 90 ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் முதல் முறையாக தனியாக தங்கம் வென்றுள்ளது இந்திய அணி.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.