ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநில காவல்துறையைப் பற்றி வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
This News Fact Checked by ‘Vishvas News’
ஒரு நிருபர் ஒரு போலீஸ்காரரைப் பின்தொடர்ந்து செல்லக்கூடிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. போலீஸ்காரரைப் பின்தொடர்ந்து ஓடும் அவர் இந்த பஞ்சாப் போலீஸ் கஞ்சா விற்று விற்கிறார் என சொல்வது வீடியோவில் கேட்கிறது. இந்த வீடியோவானது இந்தியாவில் உள்ள பஞ்சாப் காவல்துறையைக் குறிப்பிட்டு ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கத்தை குறிவைத்து பகிரப்பட்டு வருகிறது.
விஸ்வாஸ் நியூஸ் நடத்திய விசாரணையில் வைரலான வீடியோ இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தது அல்ல என்று கண்டறிந்துள்ளது. மேலும் இந்த வீடியோ பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் சார்ந்த வீடியோ பொய்யான கூற்றுடன் பரப்பப்படுகிறது.
வைரல் பதிவில் இடம்பெற்ற கூற்று :
வைரலான பதிவைப் பகிர்ந்த ஒரு பேஸ்புக் பயனர் இவ்வாறு எழுதினார், “இது போன்று எல்லா செய்தியாளர்களும் துணிச்சலாக செயல்பட்டால் நாடு முன்னேற அதிக காலம் எடுக்காது! இது கேஜ்ரிவாலின் பஞ்சாப் போலீஸ் என்பதால் செய்தியாளரின் முகத்தினை தெரிய விடவில்லை.” எனக் குறிப்பிட்டிருந்தது. இந்த வைரல் இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே பார்க்கவும் .
உண்மை சரிபார்ப்பு :
வைரலான வீடியோ முதலில் வீடியோவை கவனமாகப் பார்த்தோம். வீடியோவின் மூன்று வினாடி பிரேமில், போலீஸ்காரரின் சீருடையில் பாகிஸ்தான் கொடியைப் கவனித்தோம்.
இதன் அடிப்படையில், மேலும் விசாரணையை துவங்கிய வைரலான வீடியோவின் கீஃப்ரேம்களை கூகுள் லென்ஸ் மூலம் தேடினோம். இதன் மூலம் இந்த வீடியோ 18 டிசம்பர் 2024 அன்று X பயனரின் கணக்கில் பதிவேற்றப்பட்டது. காணொலியுடன் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த காணொளி பாகிஸ்தான் பஞ்சாபில் இருந்து வந்ததாகும். அந்த வீடியோவில் 'SA Times' என்ற பெயருடன் ஒரு லோகோ காணப்பட்டது.
مریم نواز اور عاصم منیر کی فیورٹ پنجاب پولیس چرس بیچ رہی اور
حصہ تو جاتا ہوگا عاصم منیر کو.#thankyou_Richard #FreeImranKhan
#ReleaseImranKhan #دسمبر15_یوم_شہداء #گولی_کیوں_چلائی
#IslamabadMassacre pic.twitter.com/ktmB9BsoQP— Altaf Khan🍁 (@altafkhan_313) December 17, 2024
இது தொடர்பாக மேலும் கூகுளில் 'SA Times' என்று தேடினோம். அந்த பெயரில் ஒரு முகநூல் பக்கம் கிடைத்தது. வைரல் வீடியோ இந்தப் பக்கத்தில் 20 நவம்பர் 2024 அன்று பதிவேற்றப்பட்டது . பாகிஸ்தானின் பஞ்சாபிலிருந்து இந்த வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளதாக இங்கே சொல்லப்படுகிறது. இதுதவிர, பொதுவெளியில் போதைப்பொருள் விற்றதாக போலீஸ்காரர் பிடிபட்டுள்ளதாகவும் அந்த வீடியோவில் எழுதப்பட்டுள்ளது. வைரல் வீடியோவின் நீண்ட பதிப்பை இங்கே பார்க்கலாம்.
இது தவிர, போலீஸ் சீருடையில் பாகிஸ்தானின் கொடி தெளிவாகத் தெரியும், மேலும் இந்த வீடியோவில் நிருபரின் மைக்ரோஃபோனில் ' எஸ்ஏ டைம்ஸ் ' தெரியும்.
வைரலான வீடியோவை சரிபார்க்க, நாங்கள் பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆதில் அலியைத் தொடர்புகொண்டு இந்த வைரலான பதிவைப் பகிர்ந்துள்ளோம். அந்த வீடியோ பாகிஸ்தானில் இருந்து எடுக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
போலியான பதிவைப் பகிர்ந்த 'ரமேஷ் வர்மா மவுரியா வன்ஷி' என்ற பேஸ்புக் பயனரின் சமூக வலைதளத்தை ஸ்கேனிங் செய்தபோது அவருக்கு 21 ஆயிரம் பின்தொடர்பவர்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். மேலும், ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட பதிவுகள் அவரது கணக்கிலிருந்து பகிரப்படுகின்றன.
முடிவு:
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் வைரலாகும் வீடியோ இந்தியாவின் பஞ்சாபிலிருந்து வந்ததல்ல என்று கண்டறிந்துள்ளது. மேலும் இந்த வீடியோ பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சார்ந்தது என்றும் பொய்யான கூற்றுடன் பரப்பப்படுவது உறுதியாகியுள்ளது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.