#LaptopScreen-க்குள் எறும்பு… இணையத்தில் வைரல்!
மடிக்கணினியின் திரைக்குள் ஊர்ந்து சென்ற எறும்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
எறும்புகள் வீட்டிற்குள் வருவது என்பது சாதாரணமான விஷயம் தான். எறும்புகள் வீட்டிற்குள் வருவதற்கு முக்கிய காரணம் உணவு பொருட்கள் தான். சர்க்கரை போன்ற இனிப்பு பொருட்கள், பருப்பு வகைகள், இறைச்சி துண்டுகள் போன்ற பொருட்கள் எறும்புகளை அதிகளவில் ஈர்க்கக்கூடியவையாகும். குறிப்பாக வீட்டின் இடுக்குகள், விரிசல்களில் எறும்புகள் கூடு கட்டி வாழும்.
இதையும் படியுங்கள் : முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி | இன்று தொடங்கி வைக்கிறார் துணை முதலமைச்சர் #udhayanidhi
பொதுவாக எறும்புகள் சர்க்கரை இருக்கும் பாத்திரத்தில் நுழையும். ஆனால், இங்கு ஒரு எறும்பு மடிக்கணினியின் திரைக்குள் நுழைந்துள்ளது. சமூகவலைதள பயனர் ஆதித்யா என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மடிக்கணினி பயன்படுத்தி வருகிறார். வழக்கம்போல், தனது மடிக்கணினியை பயன்படுத்தும் போது அதன் திரைக்குள் எறும்பு ஊர்ந்து செல்வதை பார்த்துள்ளார்.
இதையடுத்து, மடிக்கணினியின் திரைக்குள் ஊர்ந்து சென்ற எறும்பை வீடியோ பதிவாக எடுத்து தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவிற்கு பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், "மடிக்கணினியை சர்க்கரை பாகில் ஊறவைத்தீர்களா" என நகைச்சுவையாக பதிவிட்டார். "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எறும்புகள் தனது மடிகணினியின் முழு மதர்போர்டையும் தின்றுவிட்டன" என்று மற்றொருவர் பதிவிட்டிருந்தார். நேற்று (அக்.3ம் தேதி )பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது வரை 83,000 மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.